உளுந்தூர்பேட்டையில் குடும்ப அட்டை சிறப்பு முகாம்

Update: 2023-11-18 05:51 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உளுந்துார்பேட்டையில் இன்று மின்னனு குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு குறைதீர்வு சிறப்பு முகாம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மின்னனு குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று (18ம் தேதி) நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00மணி வரை நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புகைப்பட மாற்றம், தொலைபேசி எண் இணைப்பு போன்ற குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News