வட்டாச்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயிகள், நீதிமன்ற ஊழியர்கள்

ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்காத நிலையில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம்,ரயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்களுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-31 06:42 GMT

ஜப்தி செய்ய வந்த விவசாயிகள், நீதிமன்ற ஊழியர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம்,NO:3 குமாரபாளையம், அத்தனூர் பகுதிகளில் கடந்த 1999 ஆம் ஆண்டு ரயில் பாதை அமைப்பதற்கான விவசாய நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சுமார் 25 கோடி ரூபாய் தொகையை அரசு வழங்காததால் 30.க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க ராசிபுரம் நீதிமன்ற நீதிபதி இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ராசிபுரம் ரயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும்25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்தில் எவ்வித பொருட்கள் இல்லாததால் ஜப்தி செய்ய வந்தவர்கள் அதிகாரிகளை இடையே சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் கால அவகாசம் கேட்கவே விவசாயிகள் கலைந்து சென்றனர். மேலும் இதே போல விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்ற ஊழியர்களுடன் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிக்கு நான்கு ஐந்து முறை ஜப்தி செய்ய வந்தும் அதிகாரிகள் தொடர்ந்து இவர்களிடத்தில் உரிய பதில் அளிக்காமல் சாக்கு போக்கு கூறி வருவதும் தொடர்ந்து வாடிக்கையாகவே உள்ளது. விவசாயிகள் முறையாக நீதிமன்ற உத்தரவுடன் ஜப்தியில் ஈடுபட வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News