விவசாயக் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
கலவையில் நடந்த விவசாயக் குறை தீர்வு கூட்டத்தில் ஒருமையில் பேசிய தனி வட்டாட்சியரை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் ஒருமையில் பேசிய தனி வட்டாட்சியரை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாய ஆய்வு கூட்டம் இன்று சமூக பாதுகாப்பு நலத்துறை தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலவை சுற்றியுள்ள விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது விவசாயிகள் கலவை தாலுக்காவுக்கு உட்பட்ட பிரதான பிரச்சினைகளை எடுத்து வைத்திருந்தபோதும், அதேபோல் கடந்த கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டபோது, அதற்கு தனி வட்டாட்சியர் ராஜேஷ்வரி நீ யாருடா என்னை கேட்பது என விவசாயிய பார்த்து கேட்டார்.
இதனால் விவசாயிகள் வெளிய நடப்பு செய்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இது குறித்து விசாரணை செய்தபோது வட்டாட்சியர் இந்துமதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.