சிவகங்கையில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும்,
விவசாயிடம் டெல்லியில் அறிவித்த வாக்குறுதிகளை அமல்படுத்த கோரியும் இந்தியா முழுவதும் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஜனவரி 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை உள்ள ராமச்சந்திரா பூங்காவிலிருந்து இருசக்கர வாகனங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் வீரபாண்டி ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் காமராஜ், விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் பா.மருது மாவட்டத் துணைச் செயலாளர் கோபால் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் காளிமுத்து,
மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா காளையார் கோவில் முருகேசன் எம் எப் சகாயம் ஆட்டோ சங்க நகரச் செயலாளர் பாண்டி உட்பட பலர் பங்கேற்று இருசக்கரங்களில் பேரணியாகச் சென்று அரண்மனை வாசலில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்