விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

மும்முனை மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-05 05:53 GMT

விவசாயிகள் போராட்டம்

நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி நெமிலி சத்திரத்தெருவில் அமைந்துள்ள இளநிலை மின்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று (04.05.2024) வந்தனர்.

அவர்கள் அலுவலகத்துக்குள் சென்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி செயற்பொறியாளர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் "தங்கள் பகுதியில் மும்முனை மின்சாரம் தடைப்படுவதால் நெற்பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலையில் உள்ளது. நெற்பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச ஏதுவாக மும்முனை மின்சாரம் கூடுதலாகவும், தடையின்றியும் வழங்கவேண்டும். அரசு அறிவித்த 12 மணிநேர மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் "மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இளநிலை மின்பொறியாளர் சரவணன் கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News