மகள் அளித்த பாலியல் புகாரால் தந்தை தற்கொலை

மயிலாடுதுறை அருகே தந்தை மீது மகள் பாலியல் புகார் அளித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-19 05:55 GMT

தற்கொலை 

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ஆம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம் போன் செய்துள்ளார், சிறுமி தூங்கும்போது தனது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துவருகிறார். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக காப்பாற்றக் கோரியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகளிர் போலீசார் அந்த சிறுமியை கடந்த 12ஆம் தேதி நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர், அதில் புகாரில் தெரிவித்தது உண்மை என்றும் பலமுறை இதுபோன்று முயற்சி செய்துள்ளார் என்று ஆணித்தரமாக கூறியுள்ளது.

உடனடியாக சிறுமியின் தந்தை மீது போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல் நாகப்பட்டிணம் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்  மகளிர் போலீசார் பழைய திருச்சம்பள்ளிக்குச் சென்று சிறுமியின் தந்தையை விசாரித்தபோது பதறிப்போன அவர், இல்லை என்றும் பொய் என்றும் கூறி குடிபோதையில் போலீசையே திட்டி அனுப்யுள்ளார்.

  அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் சிறுமியின் தந்தைகுறித்து தவறாக யாரும் சொல்லவில்லை, கூலிவேலை பார்ததுவரும் அவர் தனது பிள்ளைகளுக்கு வேண்டியதை கொண்டுவந்து கொடுப்பார் என்றும் பாசமுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். அந்த சிறுமி அதிக செல்போன்களை பதுக்கி வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் என்றும் அதை அவரது தந்தை கண்டித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மகளிர் போலீசார் சிறுமியின் தந்தைமீது போக்சோ வழக்குப் பதிவுசெய்ததைக் காட்டாமல்   மூன்று முறை அவரை விசாரணைக்கு அழைத்தும் விடாப்பிடியாக அவர் வர மறுத்துவிட்டார்.       

 கடந்த 17ம் தேதி சிறுமியின் தாய் மற்றும் சகோதரி நாகப்பட்டிணம் சென்று குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிறுமியை பார்த்துப் பேசியும் பிடிவாதமாக தந்தைமீது குற்றஞ்சுமத்தியுள்ளார். .  18ஆம் தேதி காலையில் சிறுமியின் தந்தைமீது போக்சோ வழக்குப் பதிவுசெய்துள்ளதும் அவரை கைதுசெய்ய போலீசார் ஊர்க்காரர்களிடம் சொல்லியுள்ளதைக் கேட்டு சிறுமியின் தந்தை வருத்தமடைந்தார்.

 குடிபோதையில் புலம்பித்திரிந்த அவர் அன்று காலை 9 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள திடலில் குடிபோதையில் சுயநினைவு இல்லாமல் கிடப்பதாக சிறுமியின் தாயாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.உடனடியாக அவரை கார்மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளது தெரியவந்தது, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.  இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

தந்தைமீது வைத்த பாலியல் குற்றச் சாட்டு உண்மையா, அல்லது தந்தை கண்டித்ததால் அதை மறைக்க சிறுமியின் நாடகமா என்று  விசாரித்து முடிவுக்கு வருவதற்குள்  சிறுமியின் தந்தை தற்கொலையானது பழையதிருச்சம்பள்ளி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News