மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

மின்னல்.தாக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு மாலையில் ரூ.4 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

Update: 2023-11-11 05:08 GMT

நிதியுதவி வழங்கிய அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருண் (38) என்பவர், தரங்கம்பாடி அருகே 3 பேருடன் கடலில் மீன்பிடித்துவிட்டு காலையில் திரும்பியுள்ளார். கரையில் இறங்கும் நேரத்தில் கடைசியாக அருண் இறங்குவதற்குள் திடீரென்று மின்னல் தாக்கியது.

மற்ற மீனவர்கள் ஓடிவந்து பார்த்தபோது உடற்கருகி இறந்துவிட்டது தெரியவந்தது. அருணுக்கு திருமணமாகி ஜான்சி ராணி என்ற மனைவியும் மகனும், மகளும் உள்ளனர். உடனடியாக தமிழக அரசு அருண் குடும்பத்திற்கு 4 லட்சம்ரூபாய் நிவாரணம் அறிவித்தது.

நேற்று இரவு சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள் தரங்கம்பாடி பெருமாள்பேட்டை மீனவ கிராமத்திற்குச் சென்று அருண் குடும்பத்தினரிடம் 4 லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தனர்.

Tags:    

Similar News