தமிழக அரசுக்கு நிதிச்சுமை- தங்கம் தென்னரசு!

Update: 2024-06-26 10:53 GMT

தங்கம் தென்னரசு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "ரூ.12,000 கோடி அளவுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை. நாக்பூர், கொச்சி, புனே ஆகிய நகரங்களுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு நிதியும் அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. பேரிடர் நிவாரண நிதி ரூ.37,000 கோடி கோரப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.232 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது.. தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது.மாநில அரசுக்கான வரி பகிர்வு முறையாக வழங்கப்பட வேண்டும். மின் பகிர்மானத்திற்கு மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது''  என தெரிவித்தார்.

Tags:    

Similar News