தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - தமிழக அரசு

Update: 2023-11-02 07:19 GMT

பட்டாசு வெடிக்க 2  மணி நேரம் அனுமதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News