மண்ணில் புதைந்தவர்களே தீயணைப்பு வீரர்கள் மீட்பு!

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் மணலில் புதைந்த இரண்டு பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.;

Update: 2024-03-15 09:15 GMT

.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் மழை வெள்ளநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது தூத்துக்குடி நிலா கோல்டு ஸ்டோரேஜ் அருகே நேற்று இரவு இந்த வடிகால் அமைக்கும் பணியில் கடலூரை சேர்ந்த வேலு மற்றும் முருகன் உள்ளிட்ட நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கான்கிரீட் போடுவதற்காக கலவை மிஷின் வேலை நடந்த பகுதிக்கு வந்துள்ளது இதில் கலவை மிஷின் எடை தாங்காமல் மழைநீர் வடிகால் பணி நடக்கும் சுற்றுச்சூவர் பகுதியில் மண் சரிந்துள்ளது இதில் கீழே இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலு மற்றும் முருகன் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மண் சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய வேலு மற்றும் முருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கடலூரைச் சேர்ந்த வேலு என்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார் மற்றொரு நபரான முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News