திருச்செந்தூர் பக்தர்களுக்காக முதலுதவி மருத்துவ மையம்

திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்காக டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் முதலுதவி மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-05-21 12:28 GMT

திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்காக டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் முதலுதவி மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (22ம் தேதி) வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பக்தர்களின் வதிக்காக சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமினை முதுநிலை நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் நந்தினி ஸ்ரீனிவாசான் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் டிசிடபிள்யூ மருத்துவக் குழுவினர் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். முகாமில் காலையில் குடிநீர், மோர் மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ், டீ வாங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ நிறுவன அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News