சத்தியமங்கலம் குடிநீர் குழாயில் மீன் வந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம் பகுதியில் குடிநீர் குழாயில் மீன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-22 11:54 GMT

சத்தியமங்கலம் பகுதியில் குடிநீர் குழாயில் மீன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது தற்பொழுது அணையின் நீர்மட்டம் 46.21 அடியாக உள்ளது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது இந்நிலையில் இன்று காலை வழக்கமாக சத்தியமங்கலம் பகுதியில் காலை 8 மணி முதல் 9 மணி வரை பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் இன்று காலை நகராட்சி பள்ளி வடக்கு வீதியில் முகமது ரபீக் என்பவரது வீட்டில் வழக்கம்போல் குடிநீர் பிடிக்க அண்டாவை வைத்து குடிநீர் குழாய் திறந்தார். பிறகு ஒரு மீன் குஞ்சு ஒன்றுகுடிநீர் குழாய் வழியாக அண்டாவில் விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அவரவர் வீட்டில் குழாய்களில் தண்ணீர் சரியாக வருகிறதா என சோதனையிட்டனர் தண்ணீர் மிகவும் குப்பைகளாகவும் கலங்கலாகவும் வருவதை கண்டனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்து சுத்தமான குடிநீரை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News