குமரி கடலில் மலர் தூவி மீனவர்கள் மரியாதை

Update: 2023-11-21 08:03 GMT
கடலில் மலர் தூவிய மீனவர்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது.   இதையடுத்து காலையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகு வள்ளங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.  குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 900-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தியிருந்தனர்.  தேங்காபட்டணம் துறைமுகத்தில் இன்று நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகள் நடந்தது.  இதைத்தொடர்ந்து மீனவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்று கடலில் மலர் தூவி வழிபட்டனர்.
Tags:    

Similar News