மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு, மீட்டர் சேவை கட்டணமும் அதிரடியாக உயர்வு!

Update: 2024-07-19 06:52 GMT

மீட்டர் சேவை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது. தற்போது மும்முனை இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2145 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு (சிங்கள் பேஸ் மின் இணைப்பு) வழங்க ரூ.1,020 கட்டணத்தை மின் வாரியம் இதுவரை வசூலித்து வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1,535-ல் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

மீட்டர், மின் இணைப்பு பெட்டிபழுது, இணைப்பை வேறு இடத்துக்கு மாற்றுதல் ஆகியவற்றை பொருத்தவரை, ஒருமுனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ.1,070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1,535-ல் இருந்துரூ.1,610 ஆகவும், 50 கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலானபயன்பாட்டுக்கு ரூ.2,045 என்பது ரூ.2,145 ஆகவும், உயர் மின்அழுத்த இணைப்புக்கு ரூ.4,085 என்பது ரூ.4,280 ஆகவும் உயர்ந்துள்ளது.

மீட்டருக்கான டெபாசிட் தொகை, ஒருமுனை இணைப்புக்கு ரூ.765 ஆக இருந்தது ரூ.800ஆகவும், மும்முனை இணைப்புக்கு அதன் திறன் வாரியாக, ரூ.2,045, ரூ.7,050, ரூ.8,480 என இருந்த தொகை, ரூ.2,145, ரூ.7,390,ரூ.8,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் ஒருமுனை இணைப்புக்கு ரூ.5,315 என இருந்தது ரூ.5,570 ஆகவும், மும்முனை மீட்டருக்கு ரூ.7,255, ரூ.8,430 என இருந்த வைப்புத் தொகை ரூ.7,605, ரூ.8,835 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மறு இணைப்புக்கு ரூ.125, ரூ.305, ரூ.510 என இருந்த கட்டணங்கள், ரூ.130, ரூ.320, ரூ.535 என உயர்த்தப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்துக்கான கட்டணம் குறைந்த அழுத்த இணைப்புக்கு ரூ.615-ல்இருந்து ரூ.645 ஆகவும், உயர் மின்அழுத்த இணைப்புக்கு ரூ.6,130-ல் இருந்து ரூ.6,425 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, மேம்பாட்டு கட்டணமும் மின்கம்ப இணைப்புக்கு ரூ.100 முதல் ரூ.160 வரையும், கேபிள் வழியான இணைப்புக்கு ரூ.245 முதல் ரூ.345 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.15 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News