உணவு பாதுப்புதுறை அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை

சத்தியில் போலீஸார், உணவு பாதுப்புதுறை அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2024-06-27 13:03 GMT
அதிகாரிகள் ஆய்வு

 ஈரோடு மாவட்ட கலெக்டர், உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர், காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் சத்தி நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளில் போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.

கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். சத்தி போலீஸார் கடைக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் அந்த கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமத்தையும் ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் தலா ரூபாய் 25,000 வீதம் மொத்தம் 1,25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 மேலும் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து பொதுமக்களுக்கு கொடுத்த இரண்டு கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவு சார்ந்த புகார்களுக்கு 94 44 04 23 22 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சத்தி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தெரிவித்தார்.

Tags:    

Similar News