சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை

சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-06-27 10:41 GMT
சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை தாளவாடி அருகே, ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள் ளன. இந்நிலையில் கடந்த திங்களன்று தாளவாடி அருகே உள்ள, ஒசூர் பகுதியில் செயல்படாத கல் குவாரியில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. இதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து பீதி அடைந்தனர், தாளவாடி வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று முன் தினம் இரவு வனத்துறையினர், ஒசூர் பகுதி யில் பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண் காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News