அரியலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பிரச்சாரம்
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை குற்றம் சாட்சி பேசினார்.
Update: 2024-04-02 00:48 GMT
அரியலூர், ஏப். 1- அதிமுக ஆட்சியிர் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்திய தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றார் முன்னாள் அமைச்சர் செம்மலை. சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரஹாசனை ஆதரித்து, அரியலூர் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தவுத்தாய்குளம், அம்மாகுளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ள கிருஷ்ணாபுரம், பொய்யூர், மேலக்கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மேலும் பேசியது: அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட சிறந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அரியலூரில் மருத்துவக் கல்லூரி, தடுப்பணைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன. எனவே, அரியலூருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேட்பாளர் சந்திரஹாசனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர் அருணாச்சலம், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றியச் செயலர் செல்வராஜ், தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.