முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் உடல்நலக் குறைவால் மறைவு
மூத்த தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஆர் எம் வீரப்பன் உடல்நலக் குறைவால் காலமானார்.
மூத்த தமிழக அரசியல்வாதி ஆர் எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் .
நேற்று மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 98 வயதாகும் ஆர் எம் வீரப்பன் உயிரிழந்தார். எம்ஜிஆர் 1953 ஆம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பனை நியமித்திருந்தார்.
இதன் பின்னர் 1963ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் ஆர்.எம்.வீரப்பன் சினிமாப்பட நிறுவனம் ஒன்றை துவங்கினார். தொடர்ந்து, ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு முறை சட்டப்பேரவைக்கும், மூன்று முறை சட்ட மேலவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை ஆர்.எம்.வீரப்பன் வகித்துள்ளார்.