தாளவாடி மலைப்பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக மகளிருக்கு இலவச பேருந்து சேவை

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை துவங்கப்பட்டது.

Update: 2024-03-15 12:28 GMT

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை 

தாளவாடி மலைப்பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்க வேண்டும் என தாளவாடி மலை கிராம பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலைப்பகுதிகளுக்கு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி தாளவாடி மலைப்பகுதிக்கும் இலவச பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தாளவாடி மலைவாழ் கிராம மக்களுக்கு மகளிர் பயன்பெறும் வகையில் முதன்முறையாக கட்டணமில்லா இலவச பேருந்து சேவையினை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இனிப்புகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மலை கிராமங்களுக்கு இலவச பேருந்து பெண் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த இலவச கட்டணமில்லா பேருந்து சேவையானது தாளவாடி பேருந்து நிலையத்திலிருந்து சூசைபுரம், அருள்வாடி மற்றும் அரசு கலைக்கல்லூரி வழியாக பனகள்ளி உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு போக்குவரத்தும் கழகம் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நீலகிரி எம்பி ஆ ராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் உத்தரவின்படி மலைப்பகுதி கிராமங்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தாளவாடி மலைப்பகுதிக்கு மகளிருக்கான இலவச பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது விரைவில் இந்த பேருந்து சேவை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் இவர் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஈரோடு மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா, தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தூர், ஒன்றிய துணைச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாதேவ பிரசாத், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவ பிரசாத், தாளவாடி தாசில்தார் சுப்ரமணியம் மற்றும் தாளவாடி மலைப்பகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News