மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம்

சென்னைவாழ் மூத்த குடிமக்கள் ஜூன் 21ம் தேதி முதல் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-17 15:10 GMT

சென்னைவாழ் மூத்த குடிமக்கள் ஜூன் 21ம் தேதி முதல் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளார்.


மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. மா.போ.கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் / புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வரும் 21 ஜூன் 2024 முதல் 31 ஜூலை 2024 மாதம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை வழங்கப்படும்.

அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்/கல்வி சான்றிதழ்/வாக்காளர் அடையாள அட்டை, etc) மற்றும் 2 வண்ண புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News