மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.;
Update: 2024-06-06 16:19 GMT
மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
அதிக அளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. எனவே, தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.