மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தலைமை தாங்கினார்;
Update: 2023-12-04 06:23 GMT
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வனிதா தலைமை தாங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராம் வரவேற்றார். இதில் முதுகலை ஆசிரியர்கள் பிரேமா, சங்கர், பாண்டியன், ராஜவேல் , உடற்கல்வி இயக்குனர் நாகராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.