இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம்

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் வருகிற மே 18 - ஆம் தேதி வரை மாவட்ட சுகாதார அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-05-12 17:14 GMT

கோப்பு படம்

மாநில அரசு கமிட்டி அல்லது மாவட்ட அரசு கல்வி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்த முகமானது நடைபெறும் என்றும் இந்த முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடைத்தை பொது சுகாதாரத் துறையானது வெளியிட்டுள்ளது. 

அதன்படி சென்னையில் நாளை முதல் வருகிற மே 20 ஆம் தேதி வரை சூளை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News