இலவச கண் மருத்துவ முகாம்

வாரியங்காவல் அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Update: 2024-05-12 06:50 GMT

வாரியங்காவல் அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


அரியலூர், மே.12- வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட இழப்பு தடுப்புச் சங்கம், வாரியங்காவல் செங்குந்தர் கல்வி மற்றும் தர்ம பரிபாலன அறக்கட்டளை, வாரியங்காவல் ஊராட்சி மன்றம், அரியலூர் மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம், ஜெயங்கொண்டம் சோழன்சிட்டி லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். இம் முகாமினை மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மருத்துவர் நிறுவனர் டாக்டர் சிறுஜாத்தி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கண் அறுவை சிகிச்சை மற்றும் கண் நோய் சம்பந்தமான ஆலோசனை வழங்கினர்.

முகாமில் மாவட்ட பொருளாளர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் மணி.சேகர், மாவட்ட செயலாளர் ஞானசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வகுமார் மணிமொழி, ஐயப்பன், நடராஜன் உலகநாதன், அன்பழகன், தாயுமானவன், புலவர் இளங்கோ, ஜோதி ராமலிங்கம், முத்துகிருஷ்ணன், மற்றும் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பி ஜி ஆர் நகை மாளிகை உரிமையாளர் பி ஜி ரமேஷ்குமார், நைன் சங்க தலைவர் ராஜேஷ்குமார், செயலாளர் அஸ்வந்த்ராஜா, பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, 147 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News