மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 32 சதவீதம் குறைவாக மழை பதிவு

மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 32 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-16 13:02 GMT

மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 32 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாக 94.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும், ஆனால் 65 மில்லி மீட்டர் அளவுக்கு தான் மழை பதிவாகியுள்ளது. இயல்பை விட 32 சதவீதம் அளவுக்கு குறைவாக மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னையில் இயல்பாக 35.1 மில்லி மீட்டர் மழை பதிவாகும், ஆனால் 1.5 மில்லி மீட்டர் அளவுக்கு தான் மழை பதிவாகியுள்ளது, இயல்பை விட 96 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது . அதேபோல், அரியலூரில் இயல்பான மழை அளவு 56.3 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 27.7 மில்லி மீட்டர், இயல்பை விட 51 சதவீதம் அளவுக்கு குறைவாக மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் இயல்பான மழை அளவு 41.1 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 2.0 மில்லி மீட்டர், இயல்பை விட 95 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் இயல்பான மழை அளவு 123.8 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 103.5 மில்லி மீட்டர். மதுரையில் இயல்பான மழை அளவு 110.6 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 95.9 மில்லி மீட்டர், இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. வேலூரில் இயல்பான மழை அளவு 68.9 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 53.6 மில்லி மீட்டர், 22 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது. விருதுநகரில் இயல்பான மழை அளவு 121.3 மில்லி மீட்டர், பதிவான மழையின் அளவு 118.1 மில்லி மீட்டர், இது இயல்பை விட மூன்று சதவீதம் குறைவு. சென்னையில் செங்கல்பட்டிலும் தான் இயல்பை விட 90 சதவீதத்திற்கும் மேல் குறைவாக மழை பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News