காவல்துறைக்கு முழு சுதந்திரம் - இபிஎஸ் வலியுறுத்தல்
காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்பு கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.;
Update: 2024-05-31 01:49 GMT
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சமூகவிரோதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்களா? சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தெரியாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக அரசின் முதலமைச்சர் தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்பு கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.