அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-01 09:57 GMT

சென்னை ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு  மருத்துவமனையில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,06,985 ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளது எனவும்,ஆசிரியர்களுக்கான கால அட்டவணை மாவட்டம் தோறும் வழங்கப்பட்டு பரிசோதனை தினத்தன்று அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனைக்கான தொகையை தேசிய ஆசிரியர் நல வாரியத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News