கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பொன்னாடை மற்றும் புத்தகம் கொடுத்து முதலமைச்சர் வரவேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 11:45 GMT
மோடிக்கு புத்தகம் வழங்கிய முதல்வர்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இன்று (19.1.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்த ம இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, உளி ஒவியங்கள் புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.