எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கவில்லை
ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு எடுப்பது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி கொடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 12:59 GMT
மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு எடுக்க மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு எடுப்பது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி கொடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படகூடிய எந்த முடிவையும் மாவட்ட நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ எடுக்காது என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.