பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்று - ரத்து செய்யக்கோரி வழக்கு

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்று சமர்ப்பிக்ககோரும் விதியை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,

Update: 2024-04-21 02:47 GMT

பைல் படம் 

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சான்று சமர்ப்பிக்க கூறும் விதியை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு.
Tags:    

Similar News