அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மே 13 முதல் பொது மாறுதல் கலந்தாய்வு
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளை மே 13ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளத;
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 19:49 GMT
பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளை மே 13ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பாகவும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனைத்து பணிகளும் முடிவடைந்த பின் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின் ஆசிரியர்களை அவரது பணியில் இருந்து விடுவிப்பு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.