நடிகர் பிரசாந்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிரசாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது, பெண்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்தனர்.;

Update: 2024-01-04 01:05 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிரசாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது, பெண்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்தனர். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இன்று நடிகர் பிரசாந்த் நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக மழை வெள்ளத்தில் மீட்பு பணிகளை தமிழக அரசு காவல்துறை சிறப்பாக செய்தது என அவர் பாராட்டினார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் பிரசாந்த் சார்பில் இன்று தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது; பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் அந்த பாக்கியத்தை அளித்திருக்கிறார் இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள் இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும் மேலும் ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் இனிமேல் இதே போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

Tags:    

Similar News