மதவாத அரசியலா? காங்கிரஸ் கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்காது! - ஜி கே வாசன்
மத்திய பாஜக அரசு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவே செயல்பட்டு வருகிறது - ஜி கே வாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் , மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் இருந்த மாறன் என்ற வேணுகோபால் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். ,
அப்போது பேசிய அவர், ''மறைந்த மாறன் கடின உழைப்பு விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு, உடல் நல குறைவு இருந்த போதும் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வலு சேர்த்தவர். மூப்பனாருக்கு அரசியலில் பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் முதல் வரிசையில் உடன் இருந்தவர் என்றார்.
தொடர்ந்து, கோடைகாலத்தில் மழை பெய்தால் முன்னெச்சரிக்கைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிறந்த வெளி நெல் கொள்முதல், நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் அமைக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசு மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிப்பார்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திடீரென மழையால் பாதித்தன. வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கையை முறையாக கவனித்து நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்.
தமிழக அரசு பராமரிப்பு பணிகளை ஏரிகள் புனரமைப்பு மூலம் சரியாக செய்ய வேண்டும். கோடைகாலத்தில் உடனடியாக ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும்.
பட்டாசு ஆலைகள் விபத்தை தடுக்க அரசு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அரசு செயலாற்ற வேண்டும் பொது மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க வேண்டும், மக்களின் கோடைகால மின்சார சேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை.
கோடைகாலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது மக்களின் கடமையாக இருக்கிறது அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசை கேட்டுக்கொள்கிறோம்.
திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர்கள் மறைவு,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
காவல் துறை ஒரு காலகட்டத்திற்குள் உண்மை நிலையை வெளி கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
கஞ்சா கடத்தலை ஒழிக்கும் வகையில் அரசின் செயல்பாடு இல்லை என்பது பொதுமக்களின் கருத்து. கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு ஆட்சி அடிப்படையில் மக்கள் பெற்ற சிரமங்கள் ஏராளம். சொத்து தண்ணீர் பால் விலை உயர்வு ஏற்படுத்தி அதனை குறைக்க முடியாத அரசாக மக்கள் மீது சுமையை ஏற்றிய அரசாக உள்ளது.
முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, மக்களின் தேவைகளை மொத்தத்தில் பூர்த்தி செய்யாத அரசாக உள்ளது.
சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாத அரசாக உள்ளது.
சவுக்கு சங்கர் கைது குறித்த ஒரு உண்மை நிலை தெரிய வேண்டும் அரிசியில் உள்நோக்கம் உள்ளதா இல்லையா என்று மக்களுக்கு தெரியவேண்டும்
மறைந்த காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்ட பத்ம விருதுக்கு தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை ஆக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
தேர்தல் ஆணையம் வாக்கு என்னும் மையங்களுக்கு முழுமையாக சரியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அடுத்த வாரம் மும்பை தமிழக பகுதிகளிலும் அதற்கு அடுத்த வாரம் டெல்லி தமிழக பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளேன்.'' என கூறினார்.
தூத்துக்குடியில் பலருக்கு வேறு நீட் தேர்வு வினாத்தாள் வழங்கியது குறித்த கேள்விக்கு,
''அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவது தான் மாணவர்களின் நலனுக்கு நல்லது. நீட் தேர்வு வேண்டும். தேர்வை முறையாக சரியாக நடத்துவது தேர்வை நடத்தும் குழுவின் கடமை. அதை அவர்கள் சரியாக செய்து தவறினால் உள்நோக்கம் என்ன தவறு எங்கே நடந்தது என்பதை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிப்படுத்த வேண்டும், தவறு செய்தவர்கள் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தவறுகள் நடந்தால் சரி செய்யப்பட வேண்டும் அதற்காக கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பது சரி அல்ல.
தமிழக மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும், அரசு பயிற்சி மையம் முறையாக செயல்பட வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் போட்டியிடும் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் கூட்டணி நிகழ்ச்சிகளுடன் இணைந்து களப்பணிகளை சிறப்பாக செய்து வந்துள்ளோம்.
நான் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருப்பதால், இன்னும் எனக்கு பதவி காலம் உள்ளது என் கட்சியை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.
மத்திய அரசு சாதனைகள் அடிப்படையில் முதல் கட்டத்தில் இருந்து இப்போது வரை வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
பிரதமர் மோடி மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கட்சி கூறும் கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கவில்லை. மத்திய பாஜக அரசு மத நல்லிணக்க அரசாகவே செயல்பட்டு வருகிறது.
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பொருளாதாரத்தை, நாட்டை உயர்த்திருக்கிறார் பிரதமர்.
ஒரு இஸ்லாமியருக்கு கூட திமுக தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் எதையும் யாருக்கும் எதிர்பார்த்து இல்லை, சட்டமன்றத்தில் வளமாக குரல் கொடுக்கக்கூடிய அணி தாமாகவுக்கு வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைக்கப்பட்டது.'' என பேசியுள்ளார்.