மனம் தளராமல் முன்னே செல்லுங்கள் - நம்பிக்கை பதிவிட்ட முதல்வர்

மனம் தளராமல் முன்னே செல்லுங்கள் என மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-05-07 06:25 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வியை நிறைவு செய்து, கல்லூரி வாழ்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.   இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம், அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News