குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் மாடுகள் வியாபாரம் மந்தம்

குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் மாடுகள் வியாபாரம் மந்தமாகவே இருந்தது.

Update: 2024-06-07 12:17 GMT

குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் மாடுகள் வியாபாரம் மந்தமாகவே இருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார சந்தையானது வார வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய தனியார் சந்தையான இந்த சந்தையில் இன்று ஆடுகள் 10000த்திற்கும் மேற்பட்ட மாடுகள் கோழிகள் வியாபாரம் மிகவும் மந்தமாக காணப்பட்டது. இந்த சந்தைக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் ஆடுகள் மாடுகள் கோழிகள் வியாபாரத்திற்கு கொண்டுவரப்பட்டு இப்பகுதியில் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் வார வாரம் சுமார் 1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரத்து குறைவு காரணமாக வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
Tags:    

Similar News