சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 56,200க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-10-10 06:21 GMT

தங்கம் விலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 56,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,025க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம் அதனால், அவர்கள் தங்கம் வாங்குவதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதற்காக தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இப்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,240க்கும் விற்பனை அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,840 க்கும், கிராமுக்கு ரூ.7,480 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News