சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120-க்கு விற்பனை!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-10-16 07:03 GMT

Gold

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இதுவரை காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News