சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.