தங்கம் விலை... கொண்டாட்டத்தில் பொதுமக்கள் !

Update: 2024-07-24 05:10 GMT
தங்கம் விலை... கொண்டாட்டத்தில் பொதுமக்கள் !

தங்கம் 

  • whatsapp icon

மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான சுங்க வரியை குறைத்து அறிவித்ததன் மூலம் நேற்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.51,920க்கு விற்பனையாகிறது.

மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 வரை அதிகரித்து விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்து வருவதைக் கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.


Tags:    

Similar News