தமிழகத்தை தேடி வரும் கூகுள்..! அமெரிக்க டாலர்க்கு உயர்த்த இலக்கு!

Update: 2024-05-23 11:11 GMT

கூகுள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். இதன் காரணமாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது.

கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளார்கள். சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயம்செய்யபட்டுள்ளது.

Tags:    

Similar News