அரசு நில ஆக்கிரமிப்பு : முறையாக அரசு தரப்பு வாதங்களை முன் வைக்க உத்தரவு

அரசு நிலம் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரும் வழக்குகளில் முறையாக அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு மூன்று மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.;

Update: 2024-07-04 07:05 GMT
அரசு நில ஆக்கிரமிப்பு : முறையாக அரசு தரப்பு வாதங்களை முன் வைக்க உத்தரவு

பைல் படம் 

  • whatsapp icon
 அரசுக்கு ஆதரவாக செயல்படாத அரசு வழக்கறிஞர்களின் செயல், தவறான நடத்தை மட்டுமல்லாமல் குற்றமும் கூட .வழக்குகளை முறையாக நடத்தாத அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி சுப்பையா என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Tags:    

Similar News