அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் திடீர் சாவு
அரக்கோணம் அருகே அரசு மருத்துவமனை செவிலியர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகலா (38). இவர், பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரின் கணவர் கருணாகரன், தச்சுத்தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் பாணாவரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை மேகலா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கணவரிடம் கூறினார்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால், அனுமதித்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ர் பாணாவரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மேகலாவின் அண்ணன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.