ஆளுநர் எதிர்க்கட்சி தலைவராகச் செயல்படுகிறார் - துரைமுருகன் குற்றசாட்டு
தமிழகத்தின் ஆளுநர் ஆளுநராக இல்லாமல், எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, தாரப்படவேடு மற்றும் கழிஞ்சூர் ஏரிகளில் கரையை பலப்படுத்தி கரையின் மேல்பகுதியில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அகலப்படுத்தி நடைப்பாதை அமைக்கும் பணி, கலங்கள் புனரமைத்து கலங்கள்மேல் பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் கரைகளை இணைத்துச் சிறுபாலம் அமைக்கும் பணி, ஏரிகளைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாவண்ணம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கழிப்பறை அமைக்கும் பணி மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பார்வை தளம் அமைத்தல், படகு சவாரி செய்யும் வகையில் படகு குழாம் அமைத்தல் மற்றும் பறவைகள் வந்து செல்ல ஏதுவாக ஏரியின் மையத்தில் தீவுத் திட்டுகள் அமைக்கும் பணி, ஏரிக்கரையின் சாய்வுப் பகுதியில் அலைகற்கள் பதிக்கும் பணி மற்றும் இயற்கைச்சூழல் மீட்டெடுக்க மரங்கள் நடும் பணிகள் ஆகிய பணிகள் ரூ. 28 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பொழுதுபோக்குக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் ஏரியை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு விடுவதற்கான பணிகள் மற்றும் பூங்காக்கள் செயற்கை நீர் ஊற்றுங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இப்ப பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் நீர் நிலைகளை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்கும்படி காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழகத்தின் ஆளுநர் ஆளுநராக இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கட்சியாக நினைத்து செயல்படுகிறார் .இதுவரை எத்தனையோ கவர்னர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் இவரை போல யாரும் இருந்ததில்லை. கவர்னராக இல்லாமல் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார் பாஜகவினர் மீது தமிழகத்தில் பொய் வழக்கு போடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பாஜக மேல் இடத்தில் இருந்து குழு தமிழகத்திற்கு வந்துள்ளது அவர்கள் வேலையை அவர்கள் செய்வார்கள். என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.