திருவள்ளுவர் திருத்தலத்திற்கு காலை வந்து வழிபாடு செய்த ஆளுநர் ரவி.

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி திருக்கோவிலுடன் இணைந்துள்ள திருவள்ளூர் திருத்தலத்திற்கு இன்று ஆளுநர் ரவி வேட்டி சட்டையுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-05-25 00:37 GMT

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி திருக்கோவிலுடன் இணைந்துள்ள திருவள்ளூர் திருத்தலத்திற்கு இன்று ஆளுநர் ரவி வேட்டி சட்டையுடன் வந்து மரியாதை செலுத்தினார்.


சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி திருக்கோவிலுடன் இணைந்துள்ள அருள்மிகு திருவள்ளூர் திருத்தலத்திற்கு இன்று ஆளுநர் ஆர் என் ரவி பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்தார். இன்று மாலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட, இன்று காலை திருவள்ளுவர் திருத்தலத்திற்கு ஆளுநர் வந்தார். திருவள்ளூர் வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தான் பிறந்தார் என்றும், அவர் மாசி உத்திரத்தில் இறந்தார் என்றும், தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களிலும் இங்கு சிறப்பிக்கப்படுகிறது. 800 ஆண்டுகள் பழமையான இடம் இது, 600 ஆண்டுகள் பழமையான திருவள்ளுர் சிலை இங்கு கிடைத்ததால் , திருவள்ளூர் இங்கு தான் பிறந்தார் என்று சொல்கிறார்கள். திருவள்ளுவருக்காக 1935 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் திருவள்ளூர் திருநாட் கழக துணைத் தலைவர் டாக்டர் எஸ் பத்மா தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இன்றும் அதே போல் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இந்த திருவள்ளுவர் திருநாட் கழகத்தை சேர்ந்தவர்கள் கூடியிருந்தனர்.

ஏற்கனவே, சித்திரை மாதம் 1 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இங்கு வந்துள்ளார். இன்று திருவள்ளுவர் கோவிலுக்கு வந்தவர் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு பின்பு புறப்பட்டு சென்றார். அவர் வருவதற்காக முன்னதாகவே காவல்துறையினர்   பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சோதனைகளும் செய்யப்பட்டன.

Tags:    

Similar News