கம்பர் பிறந்த இடத்தில் கவர்னர் ஆய்வு

கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் தமிழக கவர்னர் பார்வையிட்டு ஆய்வு செய்து வியந்தார்.

Update: 2024-01-18 06:22 GMT

கம்பர்மேட்டில் கவர்னர் 

கம்பராமாயணத்தை மொழிபெயர்த்து இலக்கியம் படைத்து, ராம கதையை பட்டி தொட்டி எல்லாம் பரவச் செய்தவர் கம்பர். அவரதுபிறந்த இடமான மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பர்மேட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆய்வு மேற்கொண்டார். கம்பர் காலத்தில் கம்பர் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஒருநாள் சமைத்த மண் பானை உடைத்துவிட்டு மறுநாள் புதிய பானையில் சமைப்பார்கள் எனவும் அவ்வாறு உடைக்கப்பட்ட ஓடுகள் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்துள்ளது என ஆளுநரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு ஆளுநர் ஆர் என் ரவி வியந்தார்.
Tags:    

Similar News