பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் (கால்நடை அறிவியல்) முனைவர் ராகவேந்திர, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார், பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் குழு மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் இப்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இப்பட்டமளிப்பு விழாவில் 522 மாணவிகள், 644 மாணவர்கள் என மொத்தமாக 1166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் அளிக்கப்படவுள்ளது.. அதில் 955 மாணவர்கள் நேரடியாக ஆளுநரிடம் இருந்து பட்டம் பெறவுள்ளனர். இப்பட்டமளிப்பு விழாவில் 43 மனைவிகள் மற்றும் 64 மாணவர்கள் என 113 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.. 148 முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் நிறைஞர் (M.V.Sc.) பட்டங்களும், 31 முதுநிலை உணவு தொழில்நுட்பப் பிரிவில் நிறைஞர் (M.Tech.) பட்டங்களும் இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது.. இளநிலை பட்டப்படிப்புகளுள், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc., மற்றும் A.H.) பட்டங்கள் 602 மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.. இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் (B.Tech.) 78 பேர், உணவுத் தொழில்நுட்ப பிரிவிலும், 73 பேர், கோழியினத் தொழில்நுட்ப பிரிவிலும், 43 பேர் பால்வளத் தொழில்நுட்ப பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளனர் இவ்விழாவில் 78 மாணவ மாணவியருக்கு முதுநிலை பட்டயங்கள் (PG Diploma) வழங்கப்படவுள்ளது. பட்டப்படிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு 253 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, 12 விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் மாணவர் நலனுக்காக இப்பல்கலைக்கழகத்தில் புதிய 8 நன்கொடை விருதுகள் இவ்வாண்டு முதல் நிறுவப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.