அரசு பேருந்து ஓட்டுநர்களின் கவனத்திற்கு

ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-16 15:42 GMT

கோப்பு படம்

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கனத்துடன் இயக்க வேண்டும்.. பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும். பணிமனை மழைநீர் வடிகால்களில் அமைப்புகளில் அடைப்புகள் ஏதும் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது , சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர் , நடந்துநர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். நெல்லை வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் மழைவெள்ள நீரில் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டதை தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News