சேலம் அருகே அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு: மர்ம நபர் அட்டகாசம்
சேலம் அருகே அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-28 14:35 GMT
உடைக்கப்பட்ட அரசு பேருந்து
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்ஸை நாகராஜ் (46) என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ்சை வீராணத்தை அடுத்த வலசையூர் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார்.
இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனை பார்த்து டிரைவர் நாகராஜ் மற்றும் கண்டக்டர் அவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கல் வீசினார் என்று தெரியவில்லை. இது குறித்து நாகராஜ் வீராணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் மீது கல் வீசி சென்றவரை தேடி வருகின்றனர்.