குரோமிய கழிவுகளை அகற்றக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றக்கோரியது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-23 04:53 GMT
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோல் பதனிட பயன்படுத்தப்படும் குரோமியம் அதன் பயன்பாட்டிற்கு பின் கழிவுகளாக பொது இடங்களில் கொட்டப்படுகிறது என்றும், மலைபோல் குவிந்து இருக்கும் குரோமிய கழிவுகளால் சுவாச கோளாறு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Tags:    

Similar News