தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு

கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10லட்சத்திருலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 10:16 GMT

கோப்பு படம் 

 தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 5,47,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,047 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 1,164 கிடங்குகள் ஏற்கனவே கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கடன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2023-2024 ஆம் ஆண்டில் 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை ரூ.202.98 கோடி அளவிற்கு 4791 விவசாயிகள் கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

அதன்படி, சில மத்தியக் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் தானிய ஈட்டுக்கடனின் உச்ச வரம்பினை உயர்த்திட கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று இக்கடன் குறியீட்டினை ஏய்த ஏதுவாகவும், பயனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையிலும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 இலட்சத்திருலிருந்து ரூ.25 இலட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News